இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஒயிட்-பால்’ தொடரில் விளையாடி வருகின்றனர்.
இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. 2002க்குப் பிறகு பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது, இதுவே முதல் நிகழ்வாகும்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான ஜேசன் கில்லெஸ்பி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா அணி முன்னுரிமை அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜேசன் கில்லெஸ்பி:
ஜேசன் கில்லெஸ்பி சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஒன்றுக்கு பேட்டி அளித்ததாவது, “உண்மையைச் சொன்னால், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரானது ஆஸ்திரேலியாவினால் எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை, இது எனக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. மாறாக, அவர்கள் இந்தியாவிற்கு எதிரான பார்டர்-காவஸ்கர் டிராபி தொடருக்கே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். அதனால் தான், நான் பாகிஸ்தான் தொடருக்கு எதிராக எந்த விளம்பரத்தையும் பார்க்கவில்லை”.
அவர்களின் தனிப்பட்ட விருப்பம்:
மேலும் அவர் கூறுகையில், “பாக்ஸ் சேனல் சிறப்பாக விளம்பரம் செய்து வருகின்றது. ஆனால் அவர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு விளம்பரப்படுத்தவில்லை, இதன் மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (CA) முன்னுரிமைகள் எங்கு உள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது.
அது அவர்களது தனிப்பட்ட முடிவும் மற்றும் தனிப்பட்ட விருப்பமும் தான், ஆனால் அவர்களும் இந்த ஒருநாள் தொடருக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்கவில்லை. ஒரு வேளையில், அதன் நேரம் … கிரிக்கெட் நிர்வாகிகள் போட்டிகளையும் திட்டமிடுவது போன்ற மிகக் கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் பாகிஸ்தானின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களின் முன்னுரிமை மற்றும் விளம்பரப்படுத்துதல் அனைத்துமே இந்தியத் தொடருக்காகவே இருந்தது போல உணர்கிறேன். அவர்களின் இந்த செயலானது அனைவருக்கும் மிக தெளிவாகவே தெரிந்தது” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

