PAK vs NED.. ரிஸ்வான் ஷகீல் அதிரடி.! நெதர்லாந்தை பந்தாடி WC கணக்கை வெற்றியுடன் துவங்கிய பாக்.!

நேற்று தொடங்கி நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 38 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பக்கர் ஜமான் 12 ரன்களிலும் இமாமுல் ஹக் 15 ரன்களிலும் ஆட்டம் இழக்க கேப்டன் பாபர் அசாம் ஐந்து ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை மீட்டெடுத்தனர். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட் இருக்கு பார்ட்னர்ஷிப்பாக 120 ரன்கள் சேர்த்தனர். சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தங்களது அரை சதத்தையும் பூர்த்தி செய்தனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஷகீல் 52 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் ஒன்பது பவுண்டரிகளுடன் 68 ரண்களில் அவுட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 75 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் பாகிஸ்தான் அணி சற்று தடுமாற்றத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இஸ்திகார் அகமது 14 ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர்களான முகமது நவாஸ் மற்றும் சதாப் கான் இருவரும் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணி 250 ரன்கள் கடக்க உதவினர். சதாப்கான் 32 ரன்களிலும் நவாஸ் 39 ரன்களிலும் ஆட்டம் இழக்க இறுதியில் அதிரடியாக ஆடிய ஷாகின் அப்ரிதி மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரும் பாகிஸ்தான் அணி 286 ரன்கள் குவிக்க உதவினர். இறுதியாக ஹாரிஸ் 16 ரன்களிலும் ஷாஹீன் 13 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் பஸ் டி லிட் 62 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

287 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் ஓ’டவுட் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஆக்கர்மேன் 17 ரன்களில் ஆட்டம் இழக்க நெதர்லாந்து அணி 50 ரன்கள் இரண்டு விக்கெட் விலை இழந்து இருந்தது. அதன் பிறகு துவக்க வீரர் விக்ரம் சிங்குடன் ஜோடி சேர்ந்த பஸ் டி லீட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெதர்லாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அரை சதத்தை கடந்த விக்ரம் சிங் சதாப்கான் பந்துவீச்சில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஒரு முனையில் பஸ் டி லீட் சிறப்பாக ஆடினாலும் மறுமுனையில் வீரர்கள் வந்த வேகத்திலேயே திரும்பியதால் 41 ஓவரில் 25 ரன்களுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட் ஆனது. பந்திவீச்சில் சிறப்பாக செயல்பட்டதை போலவே பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக விளையாடிய பஸ் டி லீட் 68 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷாஹீன் அப்ரிதி, சதாப் கான், இப்திகார் அகமது மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது . மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்திய மண்ணில் பெரும் முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலி இறுதிப் போட்டியில் இந்திய அணி இடம் பெங்களூருவில் தோற்று இருக்கிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது அரை இறுதி போட்டியில் மொகாலியில் வைத்து இந்தியாவிடம் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அந்த அணி 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது. 68 ரன்கள் அடித்த சவுத் ஷகீல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளைய தினம் உலக கோப்பையில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தர்மசாலாவில் மோத உள்ளன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles