PAK vs AFG.. 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்.. அரையிறுதிக்கு வாய்ப்பு இருக்கிறதா.?

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடமும் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து இடமும் தோல்வியடைந்து இருந்தது. இரண்டு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியில் மோதின.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற பாபர் அசாம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தூக்க வீரர்களான இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். எனினும் 17 ரன்களில் இமாம் ஆட்டம் இழக்க அப்துல்லா ஷஃபீக் உடன் ஜோடி சேர்ந்தார் பாபர் அசாம். இந்த ஜோடி பாகிஸ்தான் அணிக்கு நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷபிக் உலக கோப்பையில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 110 ஆக இருந்தபோது 75 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த அப்துல்லா ஷபிக் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முஹம்மது ரிஸ்வான் 8 ரன்னிலும் சவுத் ஷகீல் 25 ரன்னிலும் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி சிறிய சர்வீஸ் சந்தித்தது. எனினும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். அணியின் பொறுப்பு உணர்ந்து விளையாடிய அவர் 92 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 74 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இப்திகார் அகமது 27 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

இவரது அதிரடியால் பாகிஸ்தான் அணி 250 ரகளை கடக்க உதவியது. இதனைத் தொடர்ந்து சதாப் கான் 38 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆக சாகின் அப்ரிதி மூன்று ரன்கள் உடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 282 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நூர் அகமது மூன்று விக்கெட்டுகளும் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரான் ஆகியோர் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறங்களிலும் சிதறடித்தனர் ஆப்கானிஸ்தானின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். மிகவும் அதிரடியாக விளையாடிய இவர்கள் இருவரும் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 130 ஆக இருந்தபோது 53 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 65 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸ் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா இப்ராஹிம் ஜத்ரானுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஆட்டத்தின் சூழ்நிலைகளை நன்றாக புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் விளையாடினர். மேலும் இரண்டாவது விக்கெட் இருக்கு ஜோடியாக 60 ரன்கள் சேர்த்தனர். இதனால் வெற்றி இலக்கு 100க்கும் குறைவான ரன்களில் வந்தது. சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்ராஹிம் ஜத்ரான் 113 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 87 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷாவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷஹீதி.

இவர்கள் இருவரும் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு விக்கெட் விழாமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மிகச் சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா இந்த உலகக் கோப்பையில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 84 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸருடன் 77 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடியாக விளையாடிய ஷஹீதி 45 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 283 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் புலிகள் பட்டியலில் தற்போது ஆறாவது இடத்திற்கு சென்று இருக்கிறது. மூன்று தோல்விகளுடன் இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. தற்போது வரை ஐந்து போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் மீதம் இருக்கின்றன. அவற்றில் குறைந்தது மூன்று போட்டிகளில் ஆவது வெற்றி பெற்றால் அந்த அணி அரை வீதிக்கு தகுதி பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles