இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. 8 மாதம் 3 கோப்பை.. ஆர்சிபி எடுத்த மிரட்டலான முடிவு.. இந்த முறை கப்பு எங்களுக்கு தான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025க்கான புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வியை நியமித்துள்ளது.

- Advertisement -

“கடந்த 8 மாதங்களில் ரஞ்சி டிரோபி, இராணி டிரோபி மற்றும் ஐபிஎல்ஐ வென்ற ஓம்கார், தனது இந்திய உள்நாட்டு போட்டி கடமைகளை முடித்த பிறகு 2025 ஐபிஎல் தொடருக்கு நேரத்தில் ஆர்சிபிக்கு சேர உள்ளார்” என ஆர்சிபி தனது x வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

- Advertisement -

சால்வி ஐபிஎல்-லின் புதிய பங்களிப்பாளர் அல்ல. அவர் முன்பே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். வேகப்பந்தளரின் திறமையை வளர்ப்பதில் அவர் பெற்ற நற்பெயர் பெற்றவர்.

- Advertisement -

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதல் அவரை சிறந்த பயிற்சியாளராக மாற்றுகிறது என ஆர்சிபியின் கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

புதிய நம்பிக்கையுடன் ஆர்சிபி:

மேலும், மோ போபட், “அவரது நீண்டகால அனுபவம், கிரிக்கெட் அனுபவத்தை சார்ந்த நுண்ணறிவு மற்றும் அவரது வழி நடத்துதல் எல்லாம் சேர்ந்த ஓம்கார் சால்வி எங்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருக்கு பொருத்தமானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எங்கள் அணியின் வலுவை மேலும் அதிகரிக்க வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

ஓம்கார் சால்வியின் இந்த வருகை ஆர்சிபியின் நீண்டகாலக் ஐபிஎல் கோப்பை கனவை நிறைவேற்றுமா என பொறுத்திருந்து காணலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles