NZ vs BAN.. வில்லியம்சன் 78* மிட்செல் 89*.. பங்களாதேஷை பந்தாடி நியூசிலாந்து மீண்டும் முதலிடம்.!

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் 11 வது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோதின. பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணி உடன் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையை தொடங்கியது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது . இன்று தனது மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. மறுபுறம் நியூசிலாந்து அணி இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

கடந்த ஐந்து மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பினார். முதலில் பேட்டிங்கை துவங்கிய பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அந்த அணியின் லிட்டன் தாஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டத்தின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தன்சித் ஹசன் 16 ரன்களிலும் மெஹதி ஹசன் மிராஜ் 30 ரன்களிலும் நஜ்முல் ஹுசைன் சாந்தோ 7 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

- Advertisement -

இதனால் அந்த அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் ஷக்கிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் ஐந்தாவது விக்கெட் இருக்கு சிறப்பாக விளையாடி 96 ரன்கள் சேர்த்தனர். பங்களாதேஷ் அணி 152 ரன்கள் எடுத்த நிலையில் 41 ரன்களில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷகீப் பெர்குசன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்களில் ஹென்றி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஹிர்தாய் 13 ரன்களிலும் டஸ்கின் அகமது 17 ரன்களிலும் ஆட்டம் இழக்க மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 41 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஐம்பது ஓவர்களில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பெர்குசன் 3 விக்கெட்டுகளையும் ஹென்றி மற்றும் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

- Advertisement -

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ரவீந்தரா 9 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் கேப்டன் வில்லியம்சன் மற்றும் கான்வே சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வலிமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கான்வே 45 ரன்களில் ஆட்டம் இழக்க வில்லியம்சன் உடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் இணைந்து நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அரை சதத்தை கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேன் வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்தபோது பங்களாதேஷ் அணியின் பீல்டர் எறிந்த பந்து இவரது கையில் காயத்தை ஏற்படுத்தியதால் ரிட்டயர் அவுட் ஆகி வெளியேறினார்.

இதன் பிறகு களம் இறங்கிய கிலன் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அந்த அணி 42.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல்67 பந்துகளில் 89 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 8 பௌண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மீண்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. இந்திய அணி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles