கோலி நீங்க அதவிட பெரிய ஆள் கிடையாது.. யாராவது இந்த விஷயங்களை யாராவது கோலி ரோகித் கிட்ட சொல்லணும் – யுவராஜ் சிங்கின் தந்தை பேட்டி

கிரிக்கெட்டை விட பெரியவர்கள் யாரும் இல்லை என யுவராஜ் சிங் தந்தை விராட் கோலி மீது விமர்சனம்.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி மிகவும் மோசமாக செயல்பட்டதால் விமர்சனம் அதிகமாகியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 190 ரன்கள் எடுத்து சராசரியாக 23.75 வைத்துள்ளார்.

- Advertisement -

இதை தொடர்ந்து விராட் கோலிக்கு அவரின் ஆட்டத்தில் 4வது 5வது ஸ்டம்ப் பகுதியில் வரும் பந்துகளில் உள்ள பலவீனத்தை சரி செய்ய சரியான பயிற்சி மற்றும் அறிவுரை வேண்டும் என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலி குறித்து யோகராஜ் கருத்து

நடந்து முடிந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் போலாந்த் பந்துவீச்சில் 4 முறை ஒரே மாதிரியாக வெளியேறினார் கோலி. இதை தொடர்ந்து தொடரை இழக்கவும் இவரது ஆட்டம் ஒரு காரணமாக அமைந்தது.

இதையடுத்து கோலி நல்ல ஆலோசனைகளை பெற்று தனது பலவீனத்தை சரிசெய்து கொள்ளவேண்டும் எனவும் ஜாம்பவான் என்றால் பலவீனம் இருக்காது என நினைக்கக்கூடாது என்றும் யோகராஜ் அறிவுரை.

- Advertisement -

இது குறித்து யோகராஜ் கூறுகையில் “நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும்போது ஒரு பயிற்சியாளரின் பங்கு முக்கியமான கேள்வியாகிறது. நீங்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய வீரராக இருக்கும்போது பொதுவான பயிற்சி உங்களுக்கு தேவைப்படாது. உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுவது மனித மேலாண்மைக்கான ஒருவர் தான். சில நேரங்களில், ஒரு வீரரின் மனம் நிலையற்றதாக உள்ளது ஆகையால் அவர்கள் ரன்களை எடுக்காமல் இருக்கலாம் அல்லது அவுட் ஆகிக்கொண்டே இருக்கலாம். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், அவர்களால் விளையாட்டை விட பெரிதாக இருக்க முடியாது” என்றார்

விராட் கோலி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் பெரிதும் சோபிக்காமல் இருப்பதால் அவரது இடம் கேள்வி குறியாகியுள்ளது.

ரோஹித் சர்மாவை விமர்சித்த யோகராஜ்

விராட் கோலியை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் இந்த தொடரில் சோபிக்கவில்லை. ரோஹித் சர்மா இந்த தொடரில் 3 போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மோசமான ஃபார்ம் காரணமாக தன்னை 5வது போட்டியில் இருந்து விலக்கி கொண்டார்.

“இது பயிற்சிக்கும் நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது. ஒரு வீரரின் தொழில்நுட்பக் குறைபாட்டைக் கண்டறிந்து சுட்டிக்காட்டுவது பயிற்சி. யாராவது இந்த தொழில்நுட்ப சிக்கல்களை வீரர்களுக்கு அடையாளம் கண்டு தெரிவிக்க வேண்டும். ஆனால் ரோஹித் சர்மா அல்லது விராட் கோலிக்கு யார் சொல்வார்கள்? அவர்கள் கூட யாராவது வந்து என்ன தவறு என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என தெரிவித்தார் யோகராஜ்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles