நான் தோனி பாய் குறித்து எதுவும் தவறாக கூறவில்லை.. வேண்டுமென்றே சிலர் தவறாக பரப்பி வருகின்றனர்.. நிதீஷ் குமார் ரெட்டி விளக்கம்

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

இருபதே வயதான நிதீஷ் குமார் ரெட்டி இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக களம் இறங்கி 13 போட்டிகளில் விளையாடி 303 ரன்களையும் பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இவரை எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியாவாக மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் இவர் அண்மையில் மகேந்திர சிங் தோனி குறித்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.

- Advertisement -

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார் ரெட்டி “தோனியின் பேட்டிங் கோலியின் பேட்டிங் போல டெக்னிக்கானது கிடையாது. இருந்தாலும் கூட அவர் ஒரு சாம்பியன் வீரர். அவருடைய பலம், அணிக்கு என்ன தேவை என்று அவருக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர் வெற்றிகரமான வீரராக இருக்கிறார்” என்று கூறி இருந்தார். தோனி குறித்து கூறியதில் சற்று கோபம் அடைந்த தோனி ரசிகர்கள் தோனியின் பேட்டிங் கோலியின் பேட்டிங் போன்று டெக்னிக் இல்லை என்பதை மட்டும் கட் செய்து இணையதளத்தில் பரவ விட்டனர்.

- Advertisement -

இதனை கண்ட தோனி ரசிகர்கள் நிதீஷ் குமார் ரெட்டிக்கு தனது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நிதிஷ்குமார் ரெட்டி அதற்கு தகுந்த விளக்கம் தற்போது அளித்திருக்கிறார்.

இதுகுறித்து நிதீஷ் குமார் ரெட்டி விரிவாகக் கூறும் பொழுது
“நான் ஒன்றை இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் எப்போதுமே தோனி பாயின் தீவிரமான ரசிகன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி திறமையா அல்லது மனமா என்கிற ரீதியில் கேட்கப்பட்டது. நான் தோனி பாயின் மனநிலையை வைத்து அவர் வெற்றி பெற்றதை சிறந்த உதாரணமாக எடுத்துக் கூற முயன்றேன்.

- Advertisement -

வெற்றியை தீர்மானிப்பதில் மனப்போக்கு என்பது முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். சிலர் வேண்டுமென்றே அதை தங்களுக்கு தகுந்தவாறு வெட்டி பரப்பி வருகின்றனர். அதில் நான் முழுவதாக பேசியதை கேட்காமல் தவறாக பரப்ப வேண்டாம் என்று கூறி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தற்போது மகேந்திர சிங் தோனியா? விராட் கோலியா? என்ற சண்டை சில காலமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா 2.0.. நாட்டுக்காக விளையாடுறது வேற.. ஐபிஎல் கிரிக்கெட் வேற.. பயிற்சி போட்டியில் ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ்

விராட் கோலி என்னுடைய கேப்டன் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனி தான். எனக்கும் தோனிக்கான புரிதல் அதனை வேறு யாரிடமும் காண முடியாது. அந்த அளவு எங்கள் இருவருக்கும் ஆடுகளத்திலும், ஆடுகளத்திற்கு வெளியேயும் மிகச்சிறந்த நட்புணர்வு இருக்கிறது. என்று தோனி குறித்து விராட் கோலி வெளிப்படையாக பேசியிருக்கும் நிலையில், ரசிகர்களின் இது போன்ற தேவையில்லாத சண்டைகள் நியாயமற்றது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles