இத நான் சொல்லி ஆகணும்.. பேட் மேல ஹெல்மெட்ட வச்சு செலிப்ரேட் பண்ண காரணம் இதுதான்.. நீங்க நினைச்ச மாதிரி இல்ல – நிதிஷ் ரெட்டி பேட்டி

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருக்கிறது. நான்காவது டெஸ்ட் தொடரானது மெல்போன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி தனது முதல் சதத்தை எட்டியுள்ளார். ரெட்டி, 171 பந்துகளில் 105 ரன்களுடன், MCGயில் எட்டாவது அல்லது அதற்கும் குறைவான இடத்தில் விளையாடும் ஒரு பேட்டரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் என்ற சாதனையை அவர் இப்போது சொந்தமாக்கியுள்ளார்.

- Advertisement -

மேலும், 2011 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் மேட் ப்ரியரின் 28 ஆண்டுகள் மற்றும் 311 நாட்களின் சாதனையை முறியடித்த ரெட்டி, எட்டாவது மற்றும் அதற்கும் குறைவான இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த இளம் ஆஸ்திரேலிய அல்லாதவர் ஆவார் என்ற பட்டத்தையும் பெற்றார்.

- Advertisement -

பாகுபலி கொண்டாட்டம்:

நிதீஷ் குமார் ரெட்டி சதம் அடித்த பிறகு ஆடுகளத்தில் தனது பேட்டை வைத்து அதன் முனையில் தனது ஹெல்மெட்டியும் வைத்து ஒரு கால் முட்டி போட்டு ஒரு கையில் பேட்டை பிடித்தும் மற்றொரு கையை வானத்திற்கு நேராக உயர்த்தியும் சல்யூட் அடித்தார். இதனை பார்த்த அனைவரும் பாகுபலி திரைப்படத்தில் வரும் கொண்டாட்டம் போல் இருந்தது என்று தனது கருத்துக்களை கூறினர். நிதீஷ் குமார் ரெட்டி இப்பொழுது தனது கொண்டாட்டத்தின் பின்னணி கருத்து என்னவென்று கூறியுள்ளார்.

“என் சதத்திற்குப் பிறகு, நான் என்னுடைய பேட்டை ஆடுகளத்தில் ஊன்றி அதன் மேல் தலைக்கவசத்தை வைத்தேன் ஏனென்றால் இந்த தலை கவசத்தில் இந்தியக் கொடி இருக்கும். எனவே, இந்திய கொடியுக்கு வணக்கம் செலுத்தும் விதமாக நான் அப்படி செய்தேன். நாட்டிற்காக விளையாடுவதே எனக்கு மிகப்பெரிய ஊக்கமாகும், அதுவும் நான் சதம் அடித்தது எப்பொழுதும் நினைவு கூறும் தருணமாக என் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும்,” என்று ரெட்டி BCCI -க்கு தெரிவித்தார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles