இளம் ஆல்ரவுண்டரை சாதாரணமாக நினைக்காதீங்க.. இங்கிலாந்து மண்ணில் மேஜிக் பாலை வீசுவார்.. மோர்க்கல் நம்பிக்கை

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் 9 நாட்களில் தொடங்க உள்ளது. விராட் கோலி, புஜாரா, அஸ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணின் விளையாட இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

மோர்னே மோர்க்கல் பேட்டி

இதனால் இளம் வீரர்கள் பலரும் 2 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் பங்கேற்றனர். இதன்பின் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இங்கிலாந்து மண்ணிலும் அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசும் போது, நிதீஷ் குமார் ரெட்டி மிகவும் திறமையான பவுலர். எனக்கு தெரிந்து, நிதீஷ் குமார் ரெட்டியால் மேஜிக் பந்துகளை வீச முடியும். அவருக்கு இப்போது கன்சிஸ்டன்சியுடன் பவுலிங் செய்வதை மட்டுமே பயிற்சியாக அளித்து வருகிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கன்சிஸ்டன்சியுடன் ஒரே லெந்தில் பவுலிங் செய்வது முக்கியம்.

- Advertisement -

நிதீஷ் ரெட்டியின் பவுலிங்

அவருடன் உரையாடும் போது சில இடங்களில் பவுலிங் செய்ய கூறி சவாலாக அளிப்பேன். சில நேரங்களில் பயிற்சி முடிவடையும் போது கூட கூடுதல் பயிற்சியை அளிப்பேன். அவரின் கைகளில் அதிகமாக பந்தை காண விரும்புகிறேன். அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் பிளேயிங் லெவனில் ஒரு கூடுதல் பவுலர் இருந்தாலும், இங்கிலாந்து மைதானங்களில் தங்கத்திற்கு ஈடானது.

அதனால் நிதீஷ் குமார் ரெட்டியை தயார் செய்து வருகிறோம். ஷர்துல் தாக்கூர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி மூலமாக இந்திய அணியில் ஒரு பேலன்ஸ் உள்ளது. அந்த பிட்சை பார்த்த பின், யாரின் தேவை இருக்கிறோ அந்த முடிவை எடுப்போம். இங்கிலாந்து வந்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது. அதனால் இனி டெஸ்ட் போட்டிக்கான ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். அதனை பரிசோதிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles