7300 ரன்.. 367 போட்டிகள்.. சாம்பியன்ஸ் டிராபி முன்பே ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர்.. கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தம்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குப்டில்

- Advertisement -

38 வயதான மார்ட்டின் குப்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கடைசியாக நியூசிலாந்து அணிக்காக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாள் விளையாடியுள்ளார்.

- Advertisement -

மார்ட்டின் குப்டில் அனுபவம்

முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடினார். மொத்தமாக 198 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் சராசரியாக 41.37 வீதம் 39 அரைசதம் மற்றும் 18 சதங்களுடன் 7,346 ரன்கள் குவித்துள்ளார், நியசிலாந்து அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார் மார்டின் குப்டில்.

- Advertisement -

அது மட்டுமின்றி, T20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக 2 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் என 3,531 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குப்டில்.

டெஸ்ட் போட்டிகளில் 47 போட்டிகளில் பங்கேற்று சராசரியாக 29.83 வீதம் 17 அரைசதம் மற்றும் 3 சதம் என 2,586 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இதனையடுத்து நியூசிலாந்து அணிக்காக விளையாடியது பெருமை எனவும் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார் குப்டில்.

விடைபெற்ற மார்ட்டின் குப்டில்

“என் மனைவி லாரா மற்றும் எங்கள் அழகான குழந்தைகள் ஹார்லி மற்றும் டெடிக்கு நன்றி. எனக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் நீங்கள் செய்த தியாகங்களுக்கு லாராவுக்கு நன்றி. விளையாட்டில் வரும் ஏற்ற தாழ்வுகள் அனைத்திலும் நீங்கள் எனது மிகப்பெரிய ஆதரவாளராகவும், எனது ஆலோசனையாராகவும் இருந்தீர்கள். நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இறுதியாக நியூசிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்”

இவ்வாறு தனது மனைவி, குழந்தைகள், நியூசிலாந்து அணியின் நிர்வாகம், சக வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு நன்றி சொல்லியும் தனது ஓய்வையும் அறிவித்தார் மார்ட்டின் குப்டில்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles