அடிச்சு சொல்றேன்.. இந்த சிஎஸ்கே வீரர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. ஆஸி வீரர் அதிரடி பேட்டி

ஆஸ்திரேலியா அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடந்த டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று அபாரமாகத் தொடரைக் கைப்பற்றியது.

- Advertisement -

இதில் இரு அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 383 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 174 ரன்கள் குவித்தார். பின்னர் ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி 40 ரன்களைக் குவித்தார்.

- Advertisement -

பந்துவீச்சினைப் பொருத்தவரை நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி அபாரமாகப் பந்து வீசி 30 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணி வீரர்களின் அபார பந்துவீச்சினைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 72 ரன்களும், மேட் ஹென்றி 42 ரன்களும் குவித்தனர். இதில் 4 சிக்சர்களும் அடங்கும். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 369 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணிகளின் ரச்சின் ரவீந்தரா சிறப்பாக பேட்டிங் செய்து 56 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார். ரச்சின் ரவீந்தராவின் பேட்டிங் திறமை குறித்துப் பேசிய ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் கூறுகையில்

- Advertisement -

“ரச்சின் ரவீந்தரா தற்போது சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். தற்போதுதான் அவருக்கு முதன்முறையாக பந்து வீசுகிறேன். உலகக்கோப்பையின் போது அவரது பேட்டிங்கை ஏற்கனவே பார்த்து உள்ளேன். நியூசிலாந்து அணியின் சூப்பர் ஸ்டாராக வர அவருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன.

ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து, அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியூசிலாந்து அணியை முறியடிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று நம்பிக்கையுடன் கூறினார். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாதன் லயன் புகழ்ந்து பேசிய ரச்சின் ரவீந்தரா வரும் சீசனில் சென்னை அணிக்காக களம் இறங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles