விராட் கோலியின் புகைப்படத்தை நான் பிரேம் போட்டு வைப்பேன்.. அந்த அளவிற்கு நான் அவரோட தீவிர ரசிகன் – நியூசிலாந்து வீரர் பேட்டி

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி உள்ள நியூசிலாந்து அணி அதற்குப் பிறகு நேரடியாக இந்தியாவிலிருந்து டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. இதில் நியூசிலாந்து அணியில் ஆல் ரவுண்டா வீரராக டாரி மிச்சல் விளையாடி வருகிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அவர் மிகவும் திறமை படைத்த வீரர்.

- Advertisement -

இவர் சில வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவர் விராட் கோலியின் ஆட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் நான் ஒரு மிகப்பெரிய ரசிகன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இது எந்த அளவிற்கு என்றால் அவரது புகைப்படத்தை அவரது அலுவலகத்தில் பிரேம் போட்டு வைக்கும் அளவிற்கு விராட் கோலி மிகவும் பிடிக்கும் என்று மனதார பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “விராட் கோலியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது ஆட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் நான் மிகப்பெரிய ரசிகன். அவர் கடந்த 20 வருடங்களாக தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அவரது புகைப்படத்தை பிரேம் போட்டு என் அலுவலகத்தில் நான் வைப்பேன். கிரிக்கெட்காக அவர் செய்த சாதனைகள் எல்லாம் மிகவும் பெரியது அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles