நாளை நாங்கள் சில இதயங்களை உடைக்கலாம்.. ஆனா உலகக்கோப்பையை ஏந்த எங்களுக்கு வேற வழி தெரியல – நியூசிலாந்து கேப்டன் அதிரடி

நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் கோப்பையை வெற்றி பெறுவதற்கு நடப்பு சாம்பியன் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் தீவிரமாக போட்டி போடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் நாளைய போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிச்சல் சான்ட்னர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பையை பொறுத்த வரை இந்திய அணி தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து மற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல நியூசிலாந்து அணியும் கடந்த அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு பங்கேற்று இருக்கிறது. எனவே நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் மிச்சல் சான்ட்னர் கூறும் போது ” இந்த அணியையும் கடந்த காலங்களில் இருந்த நியூசிலாந்து அணியையும் உற்று கவனித்தால் நாங்கள் கோப்பைகளை வெல்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் சூழ்நிலையையோ அல்லது எதிரணிகளையும் கண்டு நாங்கள் ஒருபோதும் மிரண்டு போவதில்லை. நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இல்லாத அணியாக கருதப்படலாம். களத்தில் எங்களுடைய சிறு சிறு வேலைகளை செய்தாலே எங்களால் கோப்பையை வெல்ல முடியும். ஒருமுறை அந்த கோப்பையை வெல்வதற்காக சில இதயங்களை உடைக்க வேண்டி இருந்தாலும் எனக்கு அது கவலை இல்லை” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles