என்னப்பா பேட்டிங் லைன் இது.. வேற வழியே இல்ல.. நாங்க கைய தூக்கி ஒத்துக்கிட்டு தான் ஆகணும் – நியூசிலாந்து கேப்டன் பிரமிப்பு

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 t20 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கில் வெற்றி பெற்று மிகச் சிறப்பான தொடராக இதை மாற்றி இருந்தது. இந்த தொடரில் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களாக சூரியகுமார் யாதவ், அபிஷேக் ஷர்மா மற்றும் இசன் கிஷன் ஆகியோர் இருந்தார்கள். இந்த ஐந்து போட்டிகளிலுமே இந்த மூன்று வீரர்கள் தங்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்கள்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த இஷான் கிஷன் இந்தத் தொடரில் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 170 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். மேலும் பேட்டிங்கில் பார்ம் அவுட் ஆக இருந்த சூரிய குமார் யாதவும் இந்தத் தொடரில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பைக்கு முன்பாக பார்முக்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து நியூசிலாந்து கேப்டன் மிச்சல் சான்ட்னர் கூறும் போது “இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் அபாரமானதாக இருந்தது. குறிப்பாக இஷான் கிஷன் டி20 உலக கோப்பைக்கு தகுதியானவர் என்று இந்த தொடர் மூலமாக நிரூபித்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் என அதிரடியான வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். எனவே இவர்கள் விளையாடும் போது இவர்களை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கையை தூக்கி ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles