என்னப்பா நேபாள் இப்படி பண்ணிட்டீங்க நம்பவே முடியல.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.. எதிர்பார்க்காத வித்தியாசமான முடிவு

இன்று டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடிய நேபாள் அணியும் இத்தாலி அணியும் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நேபாள் அணி மிகச் சிறப்பாக விளையாடிய இத்தாலி அணியை வெல்லும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேபாள் அணிக்காக நிறைய ஆதரவை கொடுத்து போட்டியை பார்த்தார்கள். இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இத்தாலி எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நேபால் அணி ஆரம்பத்தில் ஓரளவுக்கு சுமாராகவே ஆரம்பித்தது. அடுத்தடுத்து தொடர்ந்து நேபாள் அணி விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய நேபாள் அணிதானா? என்கின்ற சந்தேகமே வந்துவிட்டது. இந்த நிலையில் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து பந்துவீச்சில் அதிர்ச்சி கொடுத்த இத்தாலி பேட்டிங்கிலும் அதிர்ச்சியை கொடுத்தது. இத்தாலி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் ஆட்டம் இழக்காமல் அரை சதத்தை கடந்தார்கள். இத்தாலி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜஸ்டின் மோஸ்கா 40 பந்தில் 64 ரன்கள், அந்தோணி மோஸ்கா 32 பந்தில் 62 ரன்கள் எடுத்தார்கள். இத்தாலி அணி விக்கெட் இழக்காமல் 12.4 ஓவரில் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேபாள் அணி இப்படி ஒரு படுதோல்வியை பேட்டிங் பௌலிங்கில் அடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles