ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அணி ஃபாலோ-ஆனை தடுக்க போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப்பின் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை விரக்தியடையச் செய்தது, இருவரும் சேர்ந்து 38 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணியானது கிட்டத்தட்ட ஃபாலோ-ஆனைத் தவிர்ப்பதை உறுதிசெய்தது.
இருவரும் பேட்டிங்கில் நிதானத்தை வெளிப்படுத்தி, ஆகாஷ் தீப் 27 மற்றும் பும்ரா 10* ரன்கள் எடுத்தனர், இந்த ஜோடியானது கடினமான சூழ்நிலைகளில் போராடி இந்தியாவுக்கு 246 ரன்களை எடுக்க உதவியது.
இதனை குறித்து, போட்டிக்குப் பின்பு பேசிய ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான், ஆஸ்திரேலியா அணியின் முயற்சிகளைப் பாராட்டி. 5வது நாளில் இந்திய அணிக்கு எதிராக புதிய பந்தை திறம்பட பயன்படுத்தி இறுதி விக்கெட்டை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று லியோன் வலியுறுத்தி உள்ளார்.
நாங்கள் அந்த வாய்ப்பே தவற விட்டு விட்டோம்:
ஏபிசி ஸ்போர்ட்ஸால் நாதன் லியான் கூறியதாவது, “நான் ஆஸ்திரேலியா அணியின் முயற்சியில் பெரிதும் பெருமை கொள்கிறேன். எங்களணியில் ஜோஷ் ஹேசில்வுட் காயமடைந்த போதிலும், நாங்கள் மூன்று பந்துவீச்சாளர்களை கொண்டு, ஒன்பது விக்கெட்களை வீழ்த்தியுள்ளோம்.
ஆம், நாங்கள் ஃபாலோ -ஆன் செய்யும் வாய்ப்பு நாங்கள் இழந்துவிட்டோம், ஆனால் நாங்கள் இந்த ஆட்டத்தை எவ்வாறு முன்னெடுத்தோமோ, அதில் நாங்கள் பெருமைபடக்கூடிய ஒன்றாக உள்ளது.”
அதிரடிய காட்ட தயாராக உள்ளோம்:
மேலும் அவர், “நான் நினைக்கிறேன், புதிய பந்தில் விக்கெட் எடுப்பது மிகவும் கடுமையாக இருக்கும் என்று. நாங்கள் நம்பிக்கையுடன் இந்த இறுதி விக்கெட்டையும் எடுத்து விட்டோம் என்றால், பேட்டிங்கில் அதிரடி காட்டி திரும்பவும் நாங்கள் வெற்றியை நோக்கி பயணிப்போம். நீங்கள் இதிலிருந்து நேர்மறையான விஷயங்களை மட்டும் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறி முடித்தார், நாதன் லியான்.

