விராட் கோலியிடம் கற்றுக்கொண்ட விஷயம்.. என் கனவில் கூட அப்படி நினைத்ததே கிடையாது.. சுப்மன் கில் பகிர்வு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. 2007ம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரில் வென்றது கிடையாது. கடந்த முறை வெல்வதற்கு வாய்ப்பு கிடைத்த போதும், கொரோனா பரவல் மற்றும் ஐபிஎல் தொடர் காரணமாக கடைசி போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

- Advertisement -

விராட் கோலியிடம் கற்றுக் கொண்டது

இந்த நிலையில் சுப்மன் கில் தலைமையில் இந்திய இளம் வீரர்கள் கொண்ட அணி களமிறங்க உள்ளது. விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசும் போது, விராட் கோலிக்கு கீழ் விளையாடும் போது, அவரிடம் இருக்கும் முன்னெச்சரிக்கை ஆச்சரியமாக இருக்கும். 

- Advertisement -

களத்தில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டத்துடன் வருவார். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு புதிய திட்டத்தை வைத்திருக்கிறார். அதுதான் விராட் கோலியிடம் பிடித்தது. ஒரு திட்டம் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், உடனடியாக மாற்று திட்டத்தை உருவாக்கி பவுலர்களிடம் ஆலோசிக்க தொடங்குவார். அவர்களிடம் என்ன வேண்டும் என்பதை தெளிவாக கூறிவிடுவார்.

- Advertisement -

கனவிலும் நினைத்தது இல்லை

கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் இருவரும் என்னை ஒரு கேப்டனாக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு தலைவனாக மாற வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களிடம் என் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்னால் செய்ய முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

ஆனால் ஒரு கேப்டனாக நம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அல்லவா.. அந்த எதிர்பார்ப்பை என் மீது நானும் வைத்து கொண்டுள்ளேன். எனது தந்தை நான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக வருவேன் என்பதை கனவில் கூட நினைத்தது இல்லை. நானும் அப்படி கனாவு கண்டதில்லை. இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமே கனவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles