நான் ஒன்னும் டி20 பிளேயர் மட்டும் கிடையாது.. ரஞ்சி டிராபியில் எனது சராசரி 55.. வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்.. புலம்பிய ரிங்கு சிங்

இந்திய  டி20 அணியின் நட்சத்திர வீரர்களில் முக்கியமானவர் ரிங்கு சிங். டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இல்லாத ரிங்கு சிங், அடுத்ததாக யுபி டி20 லீக்கில் ரன்களை குவித்து வருகிறார். சிக்சர்களை மழையாக பொழிந்து வருகிறார். இதனால் ரிங்கு சிங் மீதான ஆச்சரியம் இன்னும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

ரிங்கு சிங் பேட்டி

இதனால் ஆசியக் கோப்பை தொடரில் ரிங்கு சிங் மிகப்பெரிய சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய டி20 அணியை கடந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிங்கு சிங் சேர்க்கப்படுவதில்லை. இதுகுறித்து ரிங்கு சிங் பேசும் போது, நான் சிக்ஸ் அடிக்கும் போது ரசிகர்கள் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை நன்றாக அறிவேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

ஆனால் எனது ரஞ்சி டிராபி சராசரியை அனைவரும் பார்க்க வேண்டும். எனது பேட்டிங் சராசரி 55ஆக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை உண்மையாகவே ரசிக்கிறேன். இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறேன். அதில் ஒரு போட்டியில் நன்றாக ஆடி இருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் வெறும் டி20 வீரர் மட்டும் கிடையாது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் கனவு

இந்திய அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும். ஒரேயொரு ஃபார்மெட்டில் மட்டும் விளையாடக் கூடிய வீரர் அல்ல நான். 3 வகையான கிரிக்கெட்டிலும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே என் கனவு. ஒருவேளை எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். 

எனக்கு எப்போது சுரேஷ் ரெய்னா தான் ரோல் மாடல். அவர் எப்போதும் என்னிடம் ரிங்கு எல்லாவற்றுக்கும் தயாராக இரு என்று கூறுவார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி, பங்களிப்பை வழங்க வேண்டும். சுரேஷ் ரெய்னா ஆடிய பேட்டிங் வரிசையில் தான் நானும் ஆடி வருகிறேன். அவரை போல் 3 வகையான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles