சச்சின் விலகுவதா கிளம்பிய செய்தி.. நச் பதில் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்.. முடிவுக்கு வந்த சர்ச்சை.!

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2022 ஆண்டு மாறினார். குஜராத் டைட்டன்ஸ் அணியை தலைமை தாங்கியவர், 2022ஆம் ஆண்டு கோப்பையை வென்றும், 2023ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கும், கொண்டு சென்றதன் மூலம் தனது தலைமை பண்பை நிரூபித்தார்.

- Advertisement -

இதன் மூலம் கவனம் பெற்ற ஹர்திக் பாண்டியா, நடப்பு சீசனின் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அதில் பும்ரா தொடங்கி குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகி என பல சர்ச்சைகளும் தொடங்கிய நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான ரோஹித் சர்மா, இப்போது ஒரு பேட்டராக மட்டுமே விளையாடவுள்ளார். இந்த முடிவு ரோஹித் சர்மா ரசிகர்களிடையே அதிருப்தி அலையை கிளப்பியுள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், இது ரோஹித்தின் புகழ்பெற்ற கேப்டன்சி சாதனைக்கு ஒரு அவமானம் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

எம்.எஸ் தோனியுடன் அதிக ஐபிஎல் சாம்பியன்ஷிப் சாதனையைப் பகிர்ந்துள்ள, கிரிக்கெட் ஜாம்பவான் ரோஹித் ஷர்மாவை அவமரியாதை செய்யும் நடவடிக்கையாக என மும்பை இந்தியன்ஸ் சமூக வலைத்தளங்களில் சரமாரியான கேள்வி எழுப்பி ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸின் முடிவுகளைச் சுற்றியுள்ள கொந்தளிப்புகளுக்கு மத்தியில், கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் மும்பை இந்தியன்ஸின் வழிகாட்டியான சச்சின் டெண்டுல்கர் தனது பதவியில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக வதந்திகள் பரவத் தொடங்கின. ரோஹித் ஷர்மாவின் கேப்டன் பதவி ரத்து செய்யப்பட்ட பிறகு இந்த யூகங்கள் வேகம் பெற்றன.

- Advertisement -

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில், 1989ல் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டி அறிமுகத்தை நினைவுகூரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வதந்திகளுக்கு நுட்பமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பதில் அளித்துள்ளது என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.

34 வருடங்கள் ஆகிறது என்ற தலைப்பில் மும்பை இந்தியன்ஸின் சமூக ஊடகப் பதிவில் “சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் குறிப்பிடத்தக்க பயணத்திற்கு மரியாதை செலுத்துகிறது, இந்திய அணிக்காக அவரது ஒருநாள் அறிமுகத்தின் 34 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது” என பதிவிட்டிருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles