ஐ.பி.எல் 2025 ஆண்டிற்கான மெகா ஏலத்திற்கான முன் பணிகள் மிகப் பரபரப்பாக நடந்துக் கொண்டுள்ளது. பல அணிகளின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் இம்முறை ஏலத்திற்கு வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அந்தப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்பின்னர் ரஷீத் கானும் இருப்பது பெரிய ஆச்சர்யம்.
புதிய விதிமுறைகளின் படி இந்த ஆண்டு ஒவ்வொரு அணியின் அதிகபட்சம் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கு இணையான ஆர்.டி.எம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதில் பிசிசிஐ வைத்த செக் என்னவென்றால் 5 கேப்புடு வீரர்களைத் தக்க வைத்தால் 75 கோடிகள் காலியாகிவிடும். இது தவிர அன்கேப்புடு வீரர் என்றால் 4 கோடிகள். அதிகபட்ச வீர்களைத் தக்க வைத்தால் 70% பர்ஸ் தீர்ந்துவிடும். இதன் காரணமாக ஒரு சில அணிகள் தவிர மற்றவர்கள் நட்சத்திர வீரர்களையும் ஏலத்தில் விடுகின்றனர்.
அந்த லிஸ்ட்டில் இன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான தகவல் தான் ரஷீத் கான். டி20 கிரிக்கெட்டின் லெஜன்ட் ஸ்பின்னராக உலகெங்கும் பல்வேறு தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக ரஷீத் கான் உள்ளார். 2022ல் புதிதாக வந்த குஜராத் அணி இவரை ஏலத்திற்கு முன்பு தேர்வு செய்து அணியின் இணைத்துக் கொண்டது. குஜராத் அணியின் முக்கிய அங்கமாக மிகச் சிறப்பாக அவர் பணியாற்றினார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பேச்சு வார்த்தையால் ரஷீத் கான் குஜராத் அணியை விட்டு வெளியோறவுள்ளார் எனத் தகவல்கள் வந்துள்ளது. ரஷீத் கானைத் தொடர்பு கொண்ட மும்பை நிர்வாகம் அவரை அணியை விட்டு வெளியேறுமாரு கூறி, ஏலத்தில் அவரை எப்படியாவது 20 கோடிகள் போனாலும் நிச்சயம் எடுப்போம் எனவும் வாக்குக் கொடுத்துள்ளனர். குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவைத் தொடர்ந்து ரஷீத் கானயும் வளைத்துப் போட மும்பை இந்தியன்ஸ் தீவிரமாக உள்ளனர்.
மற்ற டி20 தொடர்களில் எம்.ஐ கேப்டவுன், எம்.ஐ நியூ யார்க், எம்.ஐ எமிரேட்ஸ் ஆகிய மூன்று மும்பை சார்ந்த அணிகளுக்கும் ரஷீத் கான் விளையாடுகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும் எடுத்துக் கொண்டு, அனைத்து மும்பை சார்ந்த அணிகளுக்கும் விளையாடும் ஸ்பெஷல் ஒப்பந்தத்தைத் போடவுள்ளது.
ஒரு வேளை ரஷீத் கான் ஏலத்திற்கு வந்தால் மும்பை அணி ரோஹித், பாண்டியா, சூரியகுமார் யாதவ், பும்ரா என 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மிச்சப் பணத்தில் ரஷீத் கானுக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டத்தில் உள்ளனர். குஜராத் அணியை விட்டு ரஷீத் வெளியேறவில்லை என்றால் 4 வீரர்களுடன் 5வது வீரராக திலக் வர்மாவை தக்க வைத்துக் கொள்வர்.

