வெளியே இருந்து தோனி சார் கிட்ட கத்துக்கிட்டேன்.. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் – முகுல் சவுத்ரி உருக்கம்

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை தனி ஒரு வீரராக வென்ற முகுல் சவுத்ரி தோனி தன்னுடைய குரு என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் 27 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 54 ரன்கள் எடுத்து முகுல் சவுத்ரி லக்னோ அணிக்கு போட்டியை வென்று கொடுத்தார். இதில் மொத்தம் ஏழு சிக்ஸர்கள் அவர் அடித்தார். அதில் ஒரு சிக்சரை தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் அடித்தார்.

- Advertisement -

மேலும் இவரும் தோனி போலவே விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே தோனியை தன்னுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங் என்று உருவாகி வந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து முகுல் சவுத்ரி பேசும்போது “தோனி சார் என்னுடைய குரு. நான் அவரை பின்பற்றயே அதிரடியாக விளையாடுகிறேன். ஆரம்ப காலங்களில் அவர்தான் எனக்கு உத்வேகமாக இருந்தார். அவர் எப்படி போட்டியை முடிக்கிறார் என்று ஆர்வமாக பார்த்து அதையே பின்பற்றுகிறேன். இந்த வெற்றியை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles