சிராஜ் தலைவனாக மாறிவிட்டார்.. அந்த தமிழக வீரர் மட்டும் உயரத்தை எட்டவில்லை என்றால் சோகமடைவேன்.. உச்சி முகர்ந்து பாராட்டிய கிரேக் சேப்பல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. இந்திய அணிக்காக ஆடிய 10 வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று 3 துறைகளிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், கடைசி டெஸ்ட் போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது. 

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியையும், இந்திய வீரர்களையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிரேக் சேப்பல் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பாக கிரேக் சேப்பல், இந்திய அணியின் முன்னணி ஸ்பின் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் மாறவில்லை என்றால், நிச்சயம் ஏமாற்றம் அடைவேன். குறைந்தபட்சமாக 50 டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாடுவார் என்று நம்புகிறேன்.

- Advertisement -

கிரேக் சேப்பல் பாராட்டு

அதேபோல் 6 வாரங்களாக நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து 185 ஓவர்களை முகமது சிராஜ் வீசி இருக்கிறார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒரு எமோஷனல் மாரத்தானையே முகமது சிராஜ் ஓடி இருக்கிறார். அதிலும் கன்சிஸ்டன்சியுடன் பவுலிங் செய்ததோடு, பும்ரா இல்லாத போது பொறுப்பை உணர்ந்து பவுலர்களை வழிநடத்தி இருக்கிறார். ஒரு நாயகனுக்கான தொடக்கம் இது. 

- Advertisement -

அதுவும் ஓவல் டெஸ்ட் தொடரில் 9 விக்கெட்டுகளை வீசிய சிராஜின் ஸ்பெல் மிரள வைத்துவிட்டது. அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக மாறியது. இந்த டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் முகமது சிராஜ் அந்த அளவிற்கு நம்பிக்கையுடன் செயல்படவில்லை. அவரின் லைன் மற்றும் லெந்தில் நல்ல ரிதம் இல்லை.

தலைவன் முகமது சிராஜ்

பும்ரா இல்லாத நேரத்தில் இந்திய அணியின் பவுலிங்கை வழிநடத்த சரியான வீரரா சிராஜ் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் சிராஜ் முன்னேறிக் கொண்டே இருந்தார். அவரின் உடல்மொழி மாறிக் கொண்டே இருந்தது. அவரின் கண்களில் ஒரு நெருப்பு எரிந்து கொண்டே இருந்தது. அவர் ஃபார்மை மட்டும் மீட்டெடுக்கவில்லை, அடையாளத்தை உருவாக்கிவிட்டார். 

- Advertisement -

கடைசி டெஸ்ட் போட்டியில் சிராஜ் துணை கதாபாத்திரம் அல்ல. அவர்தான் நாயகன். அவரின் முயற்சியை விடவும், அவருன் மாற்றம் உச்சத்திற்கு சென்றது. ஒரு பவுலராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் சிராஜ் அறிமுகமானார். ஆனால் இப்போது சிராஜ் இந்தியாவின் தேவையான வீரராக மாறி இருக்கிறார். ஒரு வீரருக்கும், தலைவனுக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான். எவ்வளவு சிறந்த பேட்டிங்கை இந்திய அணி வெளிப்படுத்தினால், சிராஜ் பவுலிங்கே இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles