இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு துபாய் மைதானத்தில் தொடங்க உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதிக் கொள்வதால் ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மைக் ஹெசன் பேட்டி
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் பேசுகையில், லீக் போட்டியோ, இறுதிப்போட்டியோ.. எந்தப் போட்டியாக இருந்தாலும் நமது கவனத்தை வேலையில் வைக்க வேண்டும். இந்தப் போட்டிக்கும் எங்களின் செயல்பாடு அப்படிதான். இந்திய அணி மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கும் என்று நன்றாக தெரியும். அப்படியான ஆட்டத்தைதான் அவர்களும் விளையாடி வருகிறார்கள்.
ஏனென்றால் டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணி ஆடிய 21 டி20 போட்டிகளில் 18ல் வென்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் எந்தப் போட்டிகளையும் நான் மிஸ் செய்ய மாட்டேன். அதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நிச்சயம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக நானும் ஒரு ரசிகரை போல் காத்திருக்கிறேன்.
பாகிஸ்தான் ஸ்பின்னர்கள்
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஒரு அணியாக அனைவரும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தை காண்கிறேன். எங்களின் கவனத்தை ஆட்டத்தின் முடிவில் வைக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்காக ஆடி வரும் முகமது நவாஸை உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர்.
முகமது நவாஸ் போன்ற விரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எந்த பிட்சாக இருந்தாலும் சிக்கல் இல்லை. எங்கள் அணியில் இம்முறை 5 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதேபோல் அப்ரார், சூஃபியான் ஆகியோரும் சிறந்த ஆல்ரவுண்டர்களாக இருக்கின்றனர். பேட்டிங் வரிசையை பொறுத்தவரை, இன்னும் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

