நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று சதம் அடித்தார். இந்த போட்டியில் அவர் செய்த ஒரு விஷயம் தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி விட்டதாக முகமது கைப் கூறியிருக்கிறார்.
இந்த போட்டிக்கு முன்பாக கடந்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்கவில்லை. ஆனால் அது குறித்த எந்தவித கவலையும் இல்லாமல் நேற்று விராட் கோலி அமைதியாகவும் மகிழ்வோடும் களத்தில் விளையாடினார்.
இதுகுறித்து முகமது கைப் பேசும்போது “நேற்று விராட் கோலி விளையாடிய விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி விட்டது. கடந்த இரண்டு போட்டிகளில் ரன் எடுக்காத எந்த அழுத்தமும் அவரிடம் பார்க்க முடியவில்லை. அவர் மிகவும் சாதாரணமாக களத்தில் நடுவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். மேலும் முதல் ரன் எடுத்ததை கொண்டாடி மகிழ்ந்தார்”
“உலகில் வேறு எந்த வீரர்களாக இருந்தாலும் இரண்டு போட்டிகளுடன் எடுக்காமல் வந்து இப்படி காலத்தில் இருக்கவே முடியாது. அவர்களிடம் நிச்சயமாக அழுத்தம் இருக்கும், தவறுகள் செய்வார்கள். ஆனால் விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தை அனுபவித்து ஆடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

