ஆர்சிபில விராட் கோலி கிட்ட யாரும் ஏமாற்ற முடியாது.. அவர் கவனிச்சிட்டா கதை முடிந்தது – முகமது கைஃப் பேச்சு

19வது ஐபிஎல் சீசனுக்கு விராட் கோலி என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார்? என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் மிகவும் விரிவான முறையில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி அணி 18 வருடங்களில் முதல் முறையாக கடந்த முறை ஐபிஎல் தொடரை வென்று நடப்பு சாம்பியனாக இருந்தாலும் விராட் கோலி அணி வீரர்களை எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள விடமாட்டார் என அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் போது “விராட் கோலி ஆர்சிபி அணியில் எந்த வீரராவது முழு ஆற்றலை வெளிப்படுத்தாமல் பெரிய முயற்சி இல்லாமல் இருந்தால் விடமாட்டார். நாம் இங்கு கோப்பையை வெல்லவே வந்திருக்கிறோம் என அந்த வீரரிடம் சொல்லும் முதல் நபராக அவரே இருப்பார்”

- Advertisement -

“விராட் கோலி அணியில் இருப்பதால் எந்த வீரரும் பயிற்சியையோ அல்லது போட்டியையோ சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கவே முடியாது. அவர் மிகவும் பசியோடு இருக்கக்கூடிய வீரர். அதை எல்லா வீரர்களுக்கும் கடத்தி விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles