தற்போது சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்திருக்கும் சாம்சன் தோனி ஒரு முக்கிய தவறை செய்ய மாட்டார் என முகமது கைப் கூறியிருக்கிறார்.
நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்படுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ருதுராஜ் கேப்டன் பொறுப்பில் கொஞ்சம் சுமாராகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முகமது கைப் பேசும் பொழுது “தற்போது சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் தவறை தோனி செய்ய மாட்டார். ஏனென்றால் சஞ்சு சாம்சன் இப்போதுதான் அணிக்கு புதியவராக வந்திருக்கிறார். மேலும் துவக்க ஆட்டக்காரராக விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு கேப்டன் ஆகவும் இருக்க சஞ்சு சாம்சன் விரும்ப மாட்டார்”
“இத்தோடு சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களுடனான தொடர்பு குறித்து சஞ்சு சாம்சனுக்கு எதுவும் தெரியாது. மேலும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் பவுலர்களை எப்படி ரொட்டேட் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு தெரியாது. இதனால் கேப்டன் பொறுப்பை கொடுக்க மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

