நான் திரும்பவும் சொல்றேன்.. இந்தியா அரையிறுதிக்கு போகாது.. எங்க பாகிஸ்தானை கவலப்படாதீங்க – முகமது அமீர் பேச்சு

இந்திய அணி நாளை செமிபைனலுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் 100% செமி பைனலுக்கு செல்ல முடியாது என்பது உறுதி.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னால் வீரர் முகமது அமீர் மீண்டும் இந்திய அணி செமி பைனலுக்கு செல்லாது என உறுதியாக கூறியிருக்கிறார். அவர் முதல் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே இந்திய அணி செமி பைனலுக்கு செல்லாது என்று கூறி ஆச்சரியப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கிரிக்கெட் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசும்போது “பாகிஸ்தான் செமி பைனலுக்கு வரும் வராது என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன் இந்தியா செமி பைனலுக்கு வரவே வராது” என்று கூறி சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் அமர்ந்து சிறப்பான திட்டங்களை தீட்டி எடுத்துக் கொண்டு வரும் என கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார். இந்த வகையில் தற்போது நாளை இரவு நடைபெற இருக்கும் இந்திய வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles