பைனலில் இந்தியா மண்ணை கவ்வும்.. 2 வீரர்களை வச்சுக்கிட்டு ஜெயிக்க முடியாது.. கப் நியூசிலாந்துக்கு தான் – முகமது அமீர் அதிரடி

இன்று நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இடம் இந்திய அணி தோல்வி அடையும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணி இரண்டு வீரர்களை மட்டுமே சார்ந்து விளையாடுவதாகவும், ஆனால் நியூசிலாந்து ஒரு அணியாக சேர்ந்து அனைவரும் விளையாடி செல்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து முகமது அமீர் பேசும்போது “நியூசிலாந்து ஒரு அணியாக சேர்ந்து விளையாடுகிறது. இதை நாம் செமி பைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பார்த்தோம். ஆனால் இந்தியாவுக்கு பும்ரா மற்றும் சஞ்சு சாம்சன் இருவர் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார்கள்”

- Advertisement -

“மேலும் பவுலிங் யூனிட்டில் நியூசிலாந்து ஒரு படி மேலே இருக்கிறது. இந்தியாவுக்கு பும்ரா மட்டுமே இருக்கிறார். இத்துடன் வருண் மற்றும் ஹர்திக் பாண்டியா பெரிய அளவில் சிரமப்பட்டு வருகிறார்கள். போட்டி நடைபெறும் மைதானமும் நியூசிலாந்துக்கு சரியானதாக இருக்கும். எனவே நியூசிலாந்து அணி தான் உலகக் கோப்பையை வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles