நேற்று இந்திய அணி ஏமாற்றி ஜெயித்தது.. அது நல்ல டீமே கிடையாது.. சொதப்பலா ஆடறாங்க – முகமது அமீர் பரபரப்பு கருத்து

நேற்று டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று செமி பைனலுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் அதிர்ஷ்டத்தால் இந்திய அணி வென்று விட்டதாகவும் ஆனால் அது சிறந்த அணி கிடையாது எனவும் முகமது அமீர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் ஹெட்மயர் ஆட்டம் இழந்த விதம் சர்ச்சைக்குரியதாக இருந்ததாகவும், அது அவுட் கிடையாது, ஒருவேளை அவர் நின்று விளையாடு இருந்தால் இந்திய அணி எளிதாக தோல்வியடைந்திருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது ” ஹெட்மயர் அவுட் ஆன விதம் உண்மையில் பெரிய சர்ச்சையானது. நான் அதை அவுட் என்று நம்பவில்லை. அவர் களத்தில் இருந்திருந்து விளையாடி இருந்தால் 220 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பார்கள். அப்படி எடுத்திருந்தால் நிச்சயமாக இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும். இதுதான் திருப்புமுனை”

- Advertisement -

“மேலும் இந்திய அணியில் பும்ரா தவிர எல்லா பவுலர்களும் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். அந்த அணியின் பேட்ஸ்மேன் மிகவும் தடுமாற்றத்துடன் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா இதுவரை பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதில்லை என்று எப்போதும் சொல்கிறேன். இந்திய அணி சிறந்த அணி கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles