பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் மீண்டும் அபிஷேக் ஷர்மா பேட்டிங் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். நேற்று டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் மீண்டும் அபிஷேக் சர்மா மோசமான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்.
இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது ” நீங்கள் ஒரே பக்கமாக விளையாடுகிறீர்கள் என்றால் உங்களால் தற்போது டி20 கிரிக்கெட்டில் நிலைக்க முடியாது. இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் என்பதும் உலகக் கோப்பை என்பதும் வேறு”
” இரு நாடுகள் கிரிக்கெட்டில் அணிகள் தங்களுடைய புதிய வீரர்களை பரிசோதிக்க ஆர்வம் காட்டுவார்கள். எதிரணி வீரர் பற்றி கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் உலக கோப்பை என்று வந்தால் எதிரணியில் ஒவ்வொரு வீரர் பற்றியும் பலம் பலவீனத்தை தெரிந்து வைத்திருப்பார்கள்”
“தற்போது அபிஷேக் ஷர்மாவின் பலம் பலவீனம் தெரிந்து விட்டது. அவருக்கு ஆப் ஸ்பின் மற்றும் பந்து உடலுக்குள் இருக்கும் பொழுது திணறுகிறார் என்று கண்டுபிடித்து விட்டார்கள். ஏனென்றால் அபிஷேக் ஷர்மா ஒரே பக்கத்தில் மட்டுமே விளையாடக் கூடியவர்”
“சஞ்சு சாம்சனை எடுத்துக் கொண்டால் அவரால் மைதானத்தில் எல்லா பக்கத்திலும் விளையாட முடியும். அவருக்கு ஐபிஎல், உள்நாட்டு கிரிக்கெட் என பல அனுபவம் இருக்கிறது. ஜேக்கப் பெத்தேல் வருண் சக்கரவர்த்தியை முதல் இரண்டு பந்தில் சாதாரணமாக சிக்சர் அடித்து விட்டு, மூன்றாவது பந்தில் ஸ்விட்ச் ஹிட் மூலம் சிக்ஸர் அடித்தார். ஆனால் அபிஷேக் ஷர்மா ஒரே பக்கம் மட்டுமே ஆடுவார். அவர் இங்கு நிலைப்பது கடினம்” என்று கூறி இருக்கிறார்.

