பாகிஸ்தான் போர்டு இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்க.. அதிகப்படியான தண்டனை இத வீரர்களுக்கு கொடுங்க – முகமது அமீர் பேச்சு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத பாகிஸ்தான் வீரர்களுக்கு அவர்களுடைய பண மதிப்பில் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. இதுவரை கிரிக்கெட் உலகில் இல்லாத வினோத விஷயமாக இது அமைந்துள்ளது.

- Advertisement -

எந்த ஒரு கிரிக்கெட் வாரியமும் தங்களுடைய அணி வீரர்களுக்கு அபராதத்தை விதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்திருந்தாலும் எதிர்பார்த்ததை விட ஓரளவுக்கு பாகிஸ்தான் நன்றாகவே விளையாடியிருந்தது.

- Advertisement -

இதுகுறித்து முகமது அமீர் பேசும்பொழுது ” நீங்கள் இதற்கு அபராதம் தான் சரியானது என்று நினைத்தால் நிர்வாகிகள் முதல் தேர்வாளர்கள் வரை எல்லோருக்கும் விதிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் தவறான அணியை தேர்ந்தெடுத்தார்கள். ஏன் இந்த விஷயத்தில் எப்பொழுதும் வீரர்கள் மட்டுமே பாதிக்கப்பட வேண்டும்? இது ஒரு தவறான முன்னுதாரணம்”

- Advertisement -

” நீங்கள் அபராத முடிவை கைவிட வேண்டும். இதற்கு பதிலாக சரியாக விளையாடாத வீரர்கள் மேல் உங்களுக்கு கோபம் இருந்தால் அணியை விட்டு நீக்குங்கள். அவரை கட்டாயம் இரண்டு வருடங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட சொல்லுங்கள். அணியை விட்டு நீக்குவதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles