மோசம் ஆயிடுச்சு.. இந்திய ஐபிஎல் முதலாளிகளை இங்கிலாந்து விடக்கூடாது.. எல்லா வீரர்களும் எதிர்க்கனும் – மொயின் அலி வேண்டுகோள்

தற்போது உலகெங்கும் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக்குகளை நடத்துவது போல இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் 100 பந்து தொடரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. மேலும் உலகெங்கும் டி20 லீக்குகளில் அணிகளை வாங்கி குவிக்கும் இந்திய முதலாளிகள் தற்போது இங்கிலாந்து 100 பந்து தொடரிலும் அணிகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய ஐபிஎல் முதலாளிகள் தாங்கள் உலகெங்கும் வாங்கி உள்ள டி20 லீக் அணிகளில் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்வது கிடையாது. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என பல பக்கங்களில் தொடர்ந்து இந்திய ஐபிஎல் முதலாளிகள் புறக்கணித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து 100 பங்கு தொடருக்கான ஏலத்திலும் அங்கு அணிகளை வாங்கி உள்ள இந்திய ஐபிஎல் முதலாளிகள் பாகிஸ்தான் வீரர்களை புறக்கணித்தார்கள். இது தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்க ஆரம்பித்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து மொயின் அலி பேசும் பொழுது ” இந்தியா ஐபிஎல் முதலாளிகளின் இந்த பாகுபாடு கலாச்சாரத்தை நாம் இங்கிலாந்தில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. வீரர்கள் அனைவருமே இதற்கு எதிராக உடனடியாக பேச வேண்டும். மேலும் இந்த தவறான போக்கை கவனத்துடன் அணுகி இங்கிலாந்து தடை செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles