நாளை t20 உலக கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கோப்பையை வெல்ல சிலரின் மனதை உடைப்பதில் தடுத்து எந்த பிரச்சினையும் இல்லை என நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியிருக்கிறார்.
இதே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியிடம் மோசமாக சுருண்டு தோல்வி அடைந்தது. எனவே இந்த மைதானம் ராசியில்லாத மைதானமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இறுதி போட்டி குறித்து பேசி உள்ள மிட்சல் சான்ன்ட்னர் “ஒரு கோப்பையை எங்களால் வெல்ல முடியும் என்றால் எங்களுக்கு அதில் எந்த தயக்கமும் கிடையாது. நிச்சயமாக இந்த போட்டியில் நாங்கள் பேவரைட் அணியாக இருக்க மாட்டோம். நாங்கள் சிறிய அணியாக இருந்தாலும் நாங்கள் செய்யும் சிறிய விஷயங்களை சரியாக செய்தாலும், ஒரு அணியாக இணைந்து விளையாடினாலும் கோப்பையை வெல்ல முடியும். மேலும் ஒருமுறை நாங்கள் உலக கோப்பையை வெல்வதற்காக சிலரின் இதயங்களை உடைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் இதை நாளை செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

