கோப்பையில் கால் வைத்த சர்ச்சை.. இன்னும் பண்ணுவேன்.. மார்ஷ் சொன்ன காரணம்.. ஏற்க மறுக்கும் ரசிகர்கள்.!

ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் தனது கால்களை உலகக் கோப்பையின் மேல் வைத்து வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், மீண்டும் தான் அதுபோல் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர், நவம்பர் இரு மாதங்களில் நடைபெற்றது. இது ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் இரு போட்டிகளில் தோற்று சற்று தடுமாறினாலும், எஞ்சிய லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.

- Advertisement -

இதில் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகளான இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. இதில் இந்தியா, நியூசிலாந்து அணியையும் ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா அணியையும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

- Advertisement -

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்சல் மார்ஷ் தனது கால்களை உலகக் கோப்பையின் மேல் வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

இது உலக கோப்பையை அவமதிப்பதற்கான செயலாகும் என்று இந்திய ரசிகர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். சிலர் மிட்சல் மார்ஷிற்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டனர். இந்திய அணி வீரர் சமி இந்த செயல் தனக்கு வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்.

- Advertisement -

இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று மிட்சல் மார்ஷிடம் விளக்கம் கேட்டது. இதற்கு பதிலளித்த அவர்
“இந்த போட்டோவில் எந்தவித அவமரியாதையும் இல்லை. நான் இதுகுறித்து அதிகம் சிந்திக்கவில்லை. பலர் சோசியல் மீடியாக்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அதில் ஒன்றும் இல்லை”என்று கூறினார்.

மேலும் அவரிடம் இதேபோன்று திரும்பவும் செய்வீர்களா? என்று கேட்டபோது, ” உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆம்,நான் செய்வேன்! என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் “உலக கோப்பைத் தொடர் முடிந்த உடன் இந்தியாவுடன் பெரிய டி-20 தொடர் நடத்தி இருக்கக் கூடாது . வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உலகக் கோப்பையைக் கொண்டாட வேண்டிய நேரமிது. பின்வரும் காலங்களில் இது போன்று நடக்காது என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles