முட்டாள் தெ.ஆ அணி.. வெஸ்ட் இண்டீஸ் கூட தோற்று இருந்தா இந்தியாவை முதலிலேயே துரத்தி இருக்கலாம் – மைக்கேல் வாகன் விமர்சனம்

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆரம்ப நிலையிலே இந்திய அணியை வெளியேற்ற கிடைத்த வாய்ப்பை தென் ஆப்பிரிக்க அணி முட்டாள்தனமாக வீணடித்து விட்டதாக மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தால், இந்திய அணியை அந்த சுற்றிலேயே வெளியேற்றி இருக்கும் வாய்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” இந்த டி20 உலக கோப்பை தொடரில் முட்டாள்தனமான அணி தென் ஆப்பிரிக்க அணிதான். அவர்கள் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல விட்டிருந்தால் இந்திய அணி தானாக வெளியேறி சென்றிருக்கும். அந்த வாய்ப்பை வீணடித்து விட்டார்கள்”

- Advertisement -

“மேலும் அவர்கள் தங்களுடைய கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அனுப்பி எதிராக மூன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விளையாடினார்கள். இப்படிப்பட்ட ஒரு எளிதான போட்டியை கையில் வைத்துக்கொண்டு, தேவையில்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று இந்திய அணிக்கு வாய்ப்பை கொடுத்து விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles