2026 டி20 WC.. இந்த 4 அணிகளே அரையிறுதிக்கு வரும்.. நீங்க எதிர்பார்க்கிற இந்த டீம் வராது – மைக்கேல் வாகன் அதிரடி கணிப்பு

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் தகுதி பெறும் என்பது குறித்து தனது கணிப்பை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். எதிர்பார்த்த சில அணிகள் அவருடைய பட்டியலில் இல்லை. வழக்கம்போல் அவர் வித்தியாசமாகவே முடிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியை அவர் தேர்வு செய்திருக்கிறார். மேலும் அவருடைய சொந்த அணியான இங்கிலாந்து அணியும் கொண்டு வந்திருக்கிறார். அடுத்த இரண்டு அணிகளாக 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியையும், இதுவரை டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லாத நியூசிலாந்து அணியும் தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் கடந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்காவை அவர் தேர்வு செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவை தாண்டி நியூசிலாந்து அணியை அவர் தேர்வு செய்திருப்பதுதான் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை என ஆசிய நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இருந்தபோதிலும் அவர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு அணிகளில் ஒன்றை கூட தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles