இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவை ஆதரித்து பேசியிருக்கிறார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி எதிர்காலத் திட்டம் என சூரியகுமார் யாதவை விலகி விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
சூரியகுமார் யாதவ் முன்பு போல அதிரடியாக விளையாடாமல் இருந்து வருகிறார். அவரை நேராக அடிக்கும்படி தூண்டி மெதுவாக பந்தை வீசுகின்ற காரணத்தினால் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. எதிரணிகளின் இந்த திட்டத்தில் இருந்து அவர் வெளியில் வருவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. மேலும் அவர் ஆட வரும்பொழுது விக்கட்டுகள் வேகமாக விழுந்து இருக்கின்ற காரணத்தினால் அதிரடியாக ஆட முடியவில்லை.
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்ததும் முன்னோக்கி செல்வதற்காக சூரியகுமார் விஷயத்தில் முட்டாள்தனத்தை செய்து விடக்கூடாது. இந்த டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்தியாவின் சூரியகுமார் யாதவ் ஒரு ஜீனியஸ் பேட்ஸ்மேன்”
“ஒரு அணியில் ஒருவரைப் போல எல்லோரும் விளையாட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. ஒருவர் ஆட்டத்தை நகர்த்தி எடுத்துச் செல்லும் பொழுது மெதுவாக ஆடுவதில் தவறு கிடையாது. சூரியகுமார் யாதவ் இன்னும் அதிரடியாக ஆடலாம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் ஆட முடியாததில் எந்த தவறும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

