நாளை மறுநாள் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சார்பில் எந்த வீரர் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பை துவக்க நாளில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது. தற்போது அபிஷேக்சர்மாவுடன் பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷான் துவக்க வீரராக வந்ததால் அவரே துவக்க வீரராக இருப்பார் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” நான் அபிஷேக் ஷர்மா மூன்று வடிவத்திலும் விளையாட கூடியவர் என்று பல நாட்களாக சொல்லி வருகிறேன். அதற்கான தகுதியும் திறமையும் அவருக்கு நிச்சயம் இருக்கிறது. அவர் மூன்று வடிவத்திலும் விளையாட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறும்”
“அதே சமயத்தில் இஷான் கிஷானை இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்தவர்களை பாராட்ட வேண்டும். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிகவும் நியாயப்படுத்தி விளையாடிக் கொண்டு வருகிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை மிகச் சிறப்பாக டி20 உலக கோப்பையில் பயன்படுத்தி பெரியதாக சாதிப்பார் என்று எனக்குத் தெரியும். இவரே இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

