ஆஸ்திரேலியா 3-1 கணக்கில் இந்திய அணியைப் போடும்.. ஆனா இத தீர்மானிப்பது இந்த 4 பேர் கைல தான் இருக்கு – மேத்யூ ஹேடன் கணிப்பு !

அனல் பறக்கவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் துவங்கவுள்ளது. முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நவம்பர் 22 நடக்கிறது.

- Advertisement -

கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அணியே பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா மண்ணில் கூட தொடர்ந்து 2 முறை வரலாற்று வெற்றிகளைப் பெற்றுள்ளனர். கோப்பையை இந்த முறை எப்படியாவது வென்றாக வேண்டும் அதுவும் சொந்த மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறை மண்ணைக் கவ்வக் கூடாது என்ற வெறியில் ஆஸ்திரேலியா அணி உள்ளது.

- Advertisement -

இதற்கு முன்பு முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹேடன் தன் கணிப்பைக் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தத் தொடரை சொந்த மைதானத்தில் 3-1 என்ற கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றும் என ஹேடன் நம்புகிறார். அதே சமயம் இந்தத் தொடர் யார் பக்கம் போகும் என்பதை முடிவு செய்பவர்கள் இந்த 4 வீரர்கள் தான் எனக் குறிப்பிடும் உள்ளார்.

- Advertisement -

மேத்யூ ஹேடன் கூறியதாவது, ” என்னுடைய கணிப்பு ஆஸ்திரேலியா 3 – 1 என இந்தத் தொடரை வெல்லும். ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ், இந்திய அணியில் விராட் கோலி மற்றும் பும்ராவின் ஃபார்ம் தான் இந்தத் தொடர் யார் பக்கம் போகும் என்பதைத் தீர்மானிக்கும். ” என்றார்.

மேலும், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்டிங் ஆர்டர் குறித்தும் அவர் பேசியுள்ளார். ஓய்வு பெற்றுள்ள டேவிட் வார்னரின் இடத்தை இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி நிறப்பவுள்ளார். ” டேவிட் வார்னர் வாழ்நாளில் நாம் பார்க்கும் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் துவக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனி அதனைச் செய்வார் என நம்புகிறேன். ” என்றார் ஹேடன்.

- Advertisement -

பேட்டிங்கில் மெக்ஸ்வீனி அடுத்த ஸ்மித், லபூஷேன் அளவுக்கு திறன் கொண்டவர் என ஆஸ்திரேலியா நிர்வாகம் பெரிதாக எதிர்பார்க்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles