உங்க சேவைக்கு ரொம்ப நன்றி.. தயவு செஞ்சி கெளம்புங்க சாமி.. தேர்வுக் குழுவில் நான் இருந்திருந்தா இவரை நிச்சயம் விரட்டி அடித்திருப்பேன் – மார்க் வாக் அதிரடி விமர்சனம்

அண்மையில் நடந்துக் கொண்டிருக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் தொடரின் மத்தியில் நட்சத்திர இந்திய வீரரை இந்திய அணியில் இருந்து தூக்கி இருக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் பலத்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது. தற்போது மெல்போர்ன் மைதானத்தில் 4வது டெஸ்ட் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. தொடரின் முதல் டெஸ்ட்டில் ரோஹித் ஷர்மா இல்லாத பட்சத்தில் பும்ரா தலைமை தாங்கி அணியைச் சிறப்பாக வழி நடத்தி அபார வெற்றியைப் பதிவுச் செய்தார்.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் ரோஹித் ஷர்மா வந்து கேப்டன்சியை எடுத்துக் கொண்டார். வந்தப் போட்டியே மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது இந்தியா. மூன்றாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே தென்பட்டது. கேப்டனாக ரோஹித் சர்மாவின் ஃபீல்டு செட், பந்துவீச்சாளர்கள் தேர்வு ஆகியவற்றில் பெரிய ஏமாற்றம் தான். இதற்க்கு முன், சொந்த மண்ணில் நியூசிலாந்து தொடரில் ஒயிட் வாஷ் ஆகியது பெரிய அழுத்தத்தை போட்டுள்ளது.

- Advertisement -

பேட்டிங்கில் அவர் சுத்தமாக ஃபார்மில் இல்லை. இதுவரை 5 இன்னிங்சில் வெறும் 22 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். கடந்த 3 டெஸ்ட் தொடர்களாக ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டமாக உள்ளது. கடைசி 15 இன்னிங்சில் 155 ரன்கள் மட்டுமே.

இதனைக் குறித்து மார்க் வாக் கூறியதாவது, ” நான் இந்தியத் தேர்வுக் குழுவாக இருந்திருந்தால் நடப்பு டெஸ்ட்டில் 2வது இன்னிங்ஸை வைத்து அடுத்தப் போட்டியில் ரோஹித் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வேன். ஒரு வேளை சுதப்பினால் அவரிடம், ‘ உங்கள் சேவைகளுக்கு நன்றி.. நீங்கள் கிளம்பலாம். பும்ரா இனி கேப்டனாக இருப்பார். ‘ எனக் கூறி அவரை அணியை விட்டு நீக்குவேன். ” என்றார்.

- Advertisement -

” வெறும் 11 சராசரியில் அவர் ஆடுவது மிகவும் மோசம். எந்த ஒரு நட்சத்திர வீரர்களுக்கும் ஒரு முடிவு நிச்சயம் இருக்கும். இதெல்லாம் வழக்கம் தான். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் ரோஹித்துக்கு போதுமான இடத்தை கொடுத்துவிட்டது. ” என உண்மையைக் கடுமையாகப் பேசியுள்ளார் மார்க் வாக்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles