இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தேன்.. 10 வருடங்களுக்குப் பிறகு அதன் காரணத்தை விளக்கிய தோனி

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் பெங்களூர் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. பெங்களூரு, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் முன்னேறி உள்ளன.

- Advertisement -

இதன் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் நடைபெற இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியதை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி அடுத்த நாளே தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு புறப்பட்டார். இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் அதிகமான வண்ணம் உள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற மகேந்திர சிங் தோனி முடிவு செய்துவிட்டாரா? அல்லது தோனியின் விஷயத்தில் சென்னை நிர்வாகம் என்ன முடிவு செய்துள்ளது? என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்து கொண்டிருக்கும்போது, நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து மகேந்திர சிங் தோனி முழுமையாக விளக்கும் போது
“இந்திய அணிக்காக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடும் போது குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. நான் 2015ஆம் ஆண்டு வரை மூன்று வடிவில் ஆன கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். இதனால் எனது சொந்த ஊரான ராஞ்சியில் நான் இருப்பதே அரிதாக மாறிவிட்டது.

ஒவ்வொரு தொடருக்கும் ஐந்து முதல் ஆறு நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும். ஆனால் அந்த இடைவெளி நாட்களிலும் ஏதாவது ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும். மேலும் அதற்கு இடையில் வேறு மைதானங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலையும் வரும். இதனால் ராஞ்சியில் இரண்டு நாட்கள் தங்குவதே மிகப்பெரிய விஷயமாக மாறிவிட்டது. அந்த இரண்டு நாட்களில்தான் எனது சொந்த வேலைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஆனால் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு நன்றாக யோசித்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் எனது பெற்றோருக்கும் வயதாகிக் கொண்டே செல்வதை உணர்ந்தேன். மேலும் எனது மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. எனது குழந்தையும் வளர்ந்து வருகிறார். அதனால்தான் 2014ஆம் ஆண்டு இறுதியிலேயே டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து நான் ஓய்வினை அறிவித்தேன்.

இதையும் படிங்க:நீங்கதான் கேப்டனே இல்லையே.. அப்புறம் எதுக்கு விராட் இதெல்லாம் பண்றீங்க.. மேத்யூ ஹைடன் கேள்வி

மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கூறி இருக்கிறார். தோனி அப்போதைய தொடரில் இன்னும் பத்து டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருந்தால் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருப்பார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles