விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். தற்போது இருவருக்குமே 35 வயதை கடந்துவிட்ட நிலையில் அடுத்த ஒரு நாள் உலகக் கோப்பை வரை இவர்கள் இருவரும் தொடர்வார்களா என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா வயது முதிர்வு மற்றும் ஒரு பார்மெட்டில் மட்டுமே விளையாடுவதால் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனியிடம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரு நாள் பார்மெட்டில் விளையாடுவது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து தோனி கூறும் போது “அவர்கள் இருவரும் ஏன் விளையாடக்கூடாது என்று அதற்கான காரணத்தை கூற முடியுமா? என்னைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் தாராளமாக விளையாடலாம். அதில் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை முக்கிய விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்றால் வயது ஒரு பிரச்சனை கிடையாது மாறாக பிட்னஸ், செயல்திறன் மற்றும் உடல் தகுதி இவை மூன்றும் சரியாக இருக்கிறதா? என்பது மட்டுமே முக்கியம். இங்கு வயது ஒரு விஷயமே இல்லை. நீங்கள் 22 வயதில் இருந்தால் கூட உங்களிடம் உடல் தகுதி இல்லை என்றால் உங்களால் விளையாட முடியாது” என்று பேசி இருக்கிறார்.

