நேற்று நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து தங்களது அணிகளை பலப்படுத்திக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா சிஎஸ்கே வீரரை வாங்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான மதிஷா பத்திரனாவை லக்னோ மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இரண்டும் வாங்குவதற்கு கடுமையான போட்டி மேற்கொண்டன. இறுதியில் பத்திரனா 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஏலம் முடிந்து பேசிய சஞ்சீவ் கோயங்கா ஃபாஸ்ட் பவுலரை வாங்க எங்கள் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் விரும்பியதாக கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “சிஎஸ்கே வீரரான பத்திரனாவை எங்களுடைய கேப்டன் மற்றும் துணை கேப்டன் வாங்குவதற்கு மிக ஆர்வமாக இருந்தனர். இந்த ஏலத்தில் நான் அவரை வாங்கி விட வேண்டும் என்று இருவரும் விரும்பினர். மேலும் தனிப்பட்ட முறையில் நானும் அவரை வாங்குவதற்கு மிக ஆர்வமாக தயாரானேன். ஆனால் எங்களிடம் அதற்கு தகுந்தவாறு பணம் இல்லாததால் துரதிஷ்டவசமாக வாங்க முடியவில்லை. இருப்பினும் நோர்க்கியா 2 கோடி ரூபாய்க்கு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்”என்று அவர் பேசியிருக்கிறார்.

