தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு க்ரோவ் மற்றும் பரத் அருண் என இரண்டு பந்துவீச்சு பயிற்சியாளர்கள் உள்ளார்கள். இவர்களிடம் முகமது ஷமி எப்படி புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
லக்னோ அணி கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் விக்கெட்டை முகமது ஷமி மெதுவான புதிய பந்தில் வீழ்த்தினார்.
இதுகுறித்து க்ரோவ் பேசும்பொழுது “ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு வெறும் 4 நாட்களுக்கு முன்பாக முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் உடன் இணைந்து ஒரு புதிய வேரியேஷனை கற்றுக் கொண்டார். அதை வைத்து போட்டியில் அபிஷேக் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார்”
“இங்கு கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையே கிடையாது. மேலும் இது பரத் அருணின் பயிற்சிக்கு மட்டுமே சான்று கிடையாது. கற்றுக்கொண்ட ஷமியின் மனநிலைக்கும் ஒரு நல்ல சான்று” என்று கூறியிருக்கிறார்.

