இன்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய உள்நாட்டு இளம் வீரர் முகுல் சவுத்ரி மேஜிக் அதிரடியில் லக்னோ அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு கேப்டன் பிரகானி 24 பந்தில் 41 ரன்கள், ரகுவன்சி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு ஆயுஸ் பதோனி 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் 128 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி நெருக்கடியில் சிக்கியது. கடைசி நான்கு ஓவரில் வெற்றிக்கு 154 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில் இந்திய உள்நாட்டு வீரர் முகுல் சவுத்ரி ஏழாவது இடத்தில் வந்து 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து தனி ஆளாக லக்னோ அணியை வெல்ல வைத்தார். இவரது மேஜிக் பேட்டிங் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

