என்னால் நம்பவே முடியவில்லை.. 48000 பேர் 7ம் நம்பர் ஜெர்சி அணிந்திருந்தனர்.. திகைப்புடன் பேசிய ஜஸ்டின் லாங்கர்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கின. அதில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயின்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கௌதம் கம்பீர் அணியின் பயிற்சியாளராக விளங்கினார்.

- Advertisement -

அந்த இரண்டு ஆண்டும் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் நட்பின் அடிப்படையில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக அழைக்க, கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆக ஜஸ்டின் லாங்கர் தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.

- Advertisement -

அவரது தலைமையில் இந்த ஆண்டு லக்னோ அணி சில குறிப்பிட்டதக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எதிர்பாராத விதமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் லக்னோ அணி சென்னை அணியை எதிர்த்து விளையாடிய போது லக்னோ மைதானத்தில் மகேந்திர சிங் தோனிக்கு கிடைத்த ஆதரவை பார்த்து வியந்ததாக கூறியிருக்கிறார்.

இது குறித்து ஜஸ்டின் லாங்கர் முழுமையாக கூறும் பொழுது
“தோனிக்கு கிடைத்த வரவேற்பு அசாதாரணமான ஒன்று. இதை நான் இதற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் இப்போதுதான் பார்க்கிறேன். நாங்கள் இந்த சீசனில் இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறோம். எங்கள் மைதானத்தில் சுமார் 50,000 ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சுமார் 48 ஆயிரம் ரசிகர்கள் 7ம் நம்பர் ஜெர்சி அணிந்து மைதானத்திற்கு வந்தனர். அந்த நிகழ்வை என்னால் நம்பவே முடியவில்லை. இதற்குப் பிறகு சென்னை மைதானத்தில் நாங்கள் லக்னோ அணியை எதிர்த்து விளையாடிய போது இதேபோல 98 சதவீதம் பேர் ஏழாம் நம்பர் ஜெர்சி அணிந்து மைதானத்திற்கு வந்தனர்.

இதையும் படிங்க:இதனாலதான் ருத்ராஜை கேப்டனா ஏத்துக்கிட்ட மக்கள் பாண்டியாவை ஏத்துக்கல.. விளக்கம் கூறும் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாத்

இந்த நிகழ்வு அசாத்தியமான ஒன்று. நான் இந்தியா வந்து விளையாடிய காலத்தில் சச்சினுக்கு இதுபோன்ற வரவேற்பை பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு பயிற்சியாளராக இந்தியாவுக்கு வந்த போது விராட் கோலிக்கு பார்த்திருக்கிறேன். ஆனால் மகேந்திர சிங் தோனிக்கு கிடைத்த ஆதரவு என்பது மிகப்பெரிய ஒன்று” என்று கூறி இருக்கிறார். இவரது தலைமையில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றும், ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவியும் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்த ஐபிஎல் சீசனை முடித்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles