வீடியோ.. தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்த லிட்டன் தாஸ்.. T20 போட்டியில் சுவாரசியம்

இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் லிட்டன் தாஸ் எம் எஸ் தோனியைப் போல ரன் அவுட் செய்து அசத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் பிதா மகனாக விளங்கியவர் எம்எஸ் தோனி. கேப்டன்சி மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்குவதில் வல்லவர். அவரது நோ-லுக் ஸ்டம்ப் எனப்படும் ஸ்டம்பை பாக்காமல் பந்து வரும் திசையை நோக்கி பின்னால் திரும்பி நின்று ஸ்டம்புகளை அடிப்பதில் தனித்திறமை கொண்டவர்.

- Advertisement -

அதேபோல ஒரு ரன் அவுட்டை வங்காளதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் செய்து அசத்தி இருக்கிறார். இது மகேந்திர சிங் தோனியை நினைவுபடுத்துகிறது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இலங்கை மற்றும் வங்காளாதேஷ அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தை சணக்கா அடிக்க, பந்து மிட் ஆன் திசையில் எல்லை கோட்டினை நோக்கிச் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ரிசாத் ஹுசைன் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் நோக்கி வீச, லிட்டன் தாஸ் உடனடியாக சுதாரித்துக் கொண்டு சனக்கா எல்லைக் கோட்டினை நோக்கி வருவதற்குள் ஸ்டம்புகளை பார்க்காமல் பந்தை பிடித்து டைவ் அடித்து ரன் அவுட் செய்தார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில், இதனைக் கண்ட ரசிகர்கள் இந்த ரன் அவுட் எம் எஸ் தோனியை நிறைவு படுத்துகிறது என்று எம்எஸ் தோனி ரன் அவுட் செய்த வீடியோவைப் பகிர்ந்து தற்போது இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். இத்தொடரின் மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்து இருந்தது.

- Advertisement -

இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 86 ரன்கள் குவித்தார். பின்னர் 125 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசக அணி 19.4 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனால் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. லிட்டன் தாஸ் செய்த ரன் அவுட்டால் இந்த போட்டி ரசிகர்களிடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது அமைந்து உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles