ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் தொடரானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடரை கைப்பற்ற இந்திய அணி முயற்சிக்கிறது. அதே வேளையில், ஆஸ்திரேலியா அணி தொடரில் நிலையை சமம் செய்ய முயற்சிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், “டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் இந்தியாவுக்கு எதிராக நடக்கவிருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணியில் இருந்து மார்னஸ் லாபுசாக்னேவை நீக்க வேண்டும்…”என்று பரிந்துரைத்திருக்கிறார்.
மிட்செல் ஜான்சன்:
மிட்செல் ஜான்சன், “நீண்ட காலமாக பேட்டிங்கில் சரியாக பயன்படுத்தாத மார்னஸ் லபுஷேன் அடிலெய்டில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து மாற்ற வேண்டும்.
பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்காக யாரேனும் ஒருவர் பலியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இதை கூறவில்லை. நான் உண்மையிலேயே நம்புகிறேன், லபுஷேனுக்கு டெஸ்டில் இருந்து வெளியேற்றுவதுதான் சிறந்தது” என்று கூறினார்.
பும்ராவுக்கு எதிராக தாக்கு பிடிக்க மாட்டார்:
மேலும் அவர், “லபுஷேனுக்கு முதலில் நாட்டிற்காக விளையாடுவதற்கான அழுத்தத்தை நீக்கி அவருக்கு உள்ளூர் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அவர் மீதான அழுத்தம் பெருமளவிற்கு குறையும்.
ஜஸ்ட்ரீத் பும்ரா மற்றும் இந்திய அணிக்கு எதிராக அவர் போராடுவதை விட உள்ளூர் கிரிக்கெட் மூலம் அவர் கிரிக்கெட்டில் பயனடைந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்”.
வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்:
மேலும் அவர், “சில பேர் கூறுவார்கள் கொஞ்ச நேரம் பொறுங்கள், இப்பொழுது ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் தானே முடிந்து இருக்கிறது என்று. இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் அவர் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் 10 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
30 வயது மார்னஸ் லபுஷேன் போட்டியை விலக்கி வைக்கும்போது டெஸ்ட் அணியில் நீண்ட எதிர்காலம் இல்லை என்று பொருள் அல்ல; மூன்றாவதாக இறங்கும் பேட்ஸ்மேனுக்கு தகுதியற்றவர் என்றும் அர்த்தமில்லை.
இந்த டெஸ்டின் தற்போதைய நிலையில், அவர் சிறப்பாக செயலாற்றவில்லை எனவே மற்ற வீரர் புதிய புத்துணர்வோடு வரும்பொழுது நன்றாக செயலாற்றுவார் என்று நான் நினைக்கிறேன்”என்று கூறி முடித்தார்.

