தம்பினு கூட பாக்க மாட்டேன்.. களத்துல பெரிய சம்பவம் மும்பைக்கு என்கிட்ட காத்திருக்கு – குர்னால் பாண்டியா பேச்சு

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தங்கள் அணியே வெற்றி பெறும் என ஆர்சிபி வீரர் க்ருனால் பாண்டியா கூடியிருக்கிறார்.

- Advertisement -

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவருடைய தம்பி ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார். சகோதரர்கள் மோதிக்கொள்ள இருப்பது ஆர்வத்தை தூண்டி உள்ளது. மேலும் கடைசியாக இந்த இரு அணிகளும் மாறிக்கொண்ட போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும் போது “இரண்டு அணியில் சிறந்த அணி வெற்றி பெறும். அந்த சிறந்த அணி ஆர்சிபி. கடந்த முறை நாங்கள் மும்பை மைதானத்தில் அவர்களுக்கு எதிராக விளையாடிய பொழுது கடைசி ஓவரில் அவர்களை வென்றோம். அந்த ஓவரில் நான்தான் வீசினேன்”

- Advertisement -

“முதலில் நாங்கள் இருவரும் நல்ல போட்டியாளர்கள். ஆனால் கடைசியில் நாங்கள் சகோதரர்கள். எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் களத்தில் கொடுப்போம். போட்டி சிறப்பாக இருக்கும் என்றும் நாங்கள் வெல்வோம் என்றும் நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles