இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான t20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் இந்த போட்டியை வெற்றி பெறுவதற்கு மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த போட்டி நடைபெற உள்ளதால் இது இரண்டு நாட்டு ரசிகர்கள் இடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த t20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ? அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு எளிதான வாய்ப்பு கிடைக்கும். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. எனவே பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து கூறவேண்டும் என்றால் அங்கு ஷாஹீன் ஷா அப்ரிடி மட்டுமே இருக்கிறார். அவரும் முன்பு இருந்தது போல் கிடையாது. எனவே இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வேண்டுமானால் பாகிஸ்தான் வீரர்கள் சுழற் பந்துவீச்சாளர்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதற்கு முதலில் பாகிஸ்தான் பேட் செய்து 170 ரன்கள் குவித்து அதற்குப் பிறகு 5 சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை வெற்றி பெற முடியும்” என்று பேசியிருக்கிறார்.

